ETV Bharat / bharat

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி காஷ்மீரில் கைது!

author img

By

Published : Jan 4, 2020, 12:16 PM IST

ஸ்ரீநகர்: லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதி காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Arrest
Arrest

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இணையம், தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டு, காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது.

இதற்கிடையே, காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். காஷ்மீர் மாணவர்கள் அதிகளவில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவருவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதி வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை அம்மாநில சிறப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் நிசார் அகமது தார் என விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ககன்யான் விண்வெளி வீரர்களுக்கு உணவு தயார் செய்ய ஆலோசனை

Intro:Body:

https://twitter.com/ANI/status/1213306979000520705

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.