இது குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் வெளியிட்டுள்ள தவலின்படி, "ஹஜின் நகரின் ஹக்பரா பகுதியில் பாண்டிபோரா காவல்துறையினர், 13 ஆர்ஆர், 45 பிஎன் சிஆர்பிஎஃப் ஆகியோரால் ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதி ரஃபீக் அஹ்மத் கையெறி குண்டு வீச முயன்ற போது கைது செய்யப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் வைத்திருந்த நேரடி கையெறி குண்டுகள், வெடிமருந்துகளை (2 நேரடி கையெறி குண்டுகள், ஏ.கே .47) காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, அந்த நபர் சமீபத்தில் லஷ்கர்-இ-தொய்பாவில் சேர்ந்தார். மேலும் ஹஜின் வட்டாரத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல்துறை, பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார். இதையடுத்து, ஹஜின் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.