ஜம்மு காஷ்மீர், புட்காம் பகுதியில் ராணுவத்தினர், மாநில காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த ஐந்து பேரும் இம்ரான் ரஷீத், இஃப்ஷான் அஹ்மத் கனி, ஓவைஸ் அகமது, மொஹ்சின் காதிர் மற்றும் ஆபிட் ராதர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் அளித்து ஆதரவு அளித்ததும் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.