ETV Bharat / bharat

காந்தி 150: உலகத்தலைவர்களுக்கு உந்துசக்தியாக விளங்கிய அண்ணல்!

author img

By

Published : Sep 24, 2019, 10:42 AM IST

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் 'உலக அரங்கில் காந்தியின் தத்துவங்கள்' என்ற பார்வையில் மும்பை பல்கலைக்கழக பேராசிரியர் நீதா கான்பேக்கர் நமது ஈடிவி பாரத் செய்திக்கு எழுதிய சிறப்புக் கட்டுரை இதோ...

Gandhi

மார்டின் லூதர் கிங், தலாய் லாமா, நெல்சன் மண்டேலா உள்ளிட்ட நோபல் பரிசு பெற்ற பல்வேறு நாட்டின் தலைவர்களுக்கு ஆதர்ச நாயகனாக இருந்தவர் காந்தி. அவர்கள் தங்களின் செயல்கள், தத்துவங்களை காந்தியின் சிந்தனைகளிலிருந்து வடிவமைத்துக் கொண்டனர்.

நிறவெறி உச்சத்திலிருந்த தென்னாப்பிரிக்காவில் கறுப்பினத்தவருக்கான உரிமைகளை மீட்டெடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்டிய பெருமை நெல்சன் மண்டேலாவையே சாரும். அவரின் போராட்ட வழிமுறைகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் அண்ணல் காந்தியடிகளே.

அமெரிக்க காந்தி எனப் போற்றப்படும் அமெரிக்க கறுப்பின உரிமைப் போராளி மார்டின் லூதர் கிங் காந்திய தத்துவங்களால் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விவரிக்கிறார். 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கறுப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் மார்டின் லூதர் கிங்.

காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தை உணர்ந்துகொள்ள இந்தியா வந்த மார்டின் லூதர் கிங், "மகாத்மாவின் அன்பு நெறிக்கும் மானிட இனத்தின் மீது இயேசு பிரான் கொண்ட கருணைக்கும் உள்ள ஒற்றுமையை கண்டடைந்தேன்" எனக் குறிப்பிடுகிறார். அடக்குமுறைக்குள்ளாகும் மக்களின் தலைசிறந்த ஆயுதம் அகிம்சையே என்றும் தீர்க்கமாக கூறுகிறார் மார்டின் லூதர் கிங்.

Gandhi
போராட்ட களத்தில் காந்தி

காந்தியின் அகிம்சை போராட்ட வடிவமானது உலகமெங்கும் உள்ள சாமானிய மக்களால் எளிதில் கைக்கொள்ளக்கூடியதாக இருந்தது. கிழக்கு ஐரோப்பியாவில் கம்யூனிச ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக போலாந்து, செக்கோ ஸ்லோவாகியா போன்ற நாடுகளின் மக்கள் அகிம்சை வழியில் எதிர்த்துப் போராடி வெற்றிகண்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வாதிகாரி பெர்டினாட் மார்கோஸ் மக்களின் எழுச்சிப் போராட்டத்தால் தனது பதவியை ராஜினாமா செய்து ஜனநாயக்திற்கு அடிபணிந்தார்.

இதையும் பார்க்கலாமே: மதநல்லிணக்கத்தின் அடையாளமான காந்தி பவன் ஆசிரமம்

1937ஆம் ஆண்டு வர்தா பகுதியில் காந்தியை சந்திக்கவந்த ஃபிரான்ஸ் நாட்டுக் கல்வியாளர் ஜோசப் ஜான் லன்சா டெல் வாஸ்தோ, அவரின் சீடராக மாறி அமைதியின் சேவகர் என்று தன்னை அறிவித்துக்கொண்டார். பின்னாளில் ஃபிரான்ஸ் நாட்டு அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய அவர், அந்நாட்டில் அல்ஜீரியர்களுக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தார்.

பாலாஸ்தீன நாட்டின் 'காசா காந்தி' எனப்படும் எட்வர்டு சைடுக்கும் அர்ஜென்டினாவின் மனித உரிமை அமைப்பான எஸ்குவில் அமைப்புக்கும் தான்சானியாவின் இன உரிமைப் போராளி ஜூலியஸுக்கும் நைஜீரிய மக்களின் தலைவர் அமினு கானோவுக்கு அண்ணல் காந்தியடிகளே முன்னுதாரணமாக இருந்துள்ளார்.

Gandhi
மக்கள் கூட்டத்திற்கிடையே காந்தி

20ஆம் நூற்றாண்டின் மக்கள் இயக்கப்போக்கையே மாற்றியமைத்த தனி ஆளுமை என்றால் அது காந்திதான். கிழக்கு தொடங்கி மேற்குவரை பரந்துகிடக்கும் நாடுகள் ஒவ்வொன்றிலும் காந்திய பண்புகள் வேர்விட்டு உள்ளது. வெறுப்பினாலும் வன்முறையாலும் துண்டாடப்பட்டிருக்கும் இன்றைய உலகின் அமைதிக்கு வழித்துணையாக நம்முன் நிற்பவர் அண்ணல் காந்தியடிகளே!

இதையும் படிக்கலாமே: காந்தியின் அகிம்சை நவீன இந்தியாவில் செல்லுபடியாகுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.