ETV Bharat / bharat

இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு: புதிய தலைவர் தேர்வு? - காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஆகஸ்ட் 24) கூட உள்ள நிலையில், புதிய தலைவர் தேர்தெடுக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Congress
Congress
author img

By

Published : Aug 24, 2020, 5:02 AM IST

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 24) கூடுகிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக இருக்கும் நிலையில், புதிய தலைவர் தேர்வு, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தை சாராதவர்களுக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என்ற விவாதம் எழுந்துள்ளது. இதனிடையே, குலாம் நபி ஆசாத், அனந்த் சர்மா, கபில், சிபல், சசி தரூர், வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கட்சியின் அடிப்படை கட்டமைப்பு சரியாக இல்லை, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது.

பொருளாதாரம், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதிலும், அக்கட்சி வலுவடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முன்வந்தபோது, மக்களவைத் தேர்தலில் 44 இடங்களை மட்டுமே பெற்று காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. பின்னர் 2019ஆம் ஆண்டும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதும் அதையே எதிர்கொள்ள நேரிட்டது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், கமல்நாத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவிடம் சென்றதால், மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழக்க நேரிட்டது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், புதுச்சேரியில் மட்டுமே காங்கிரஸ் தற்போது ஆட்சியில் உள்ளது.

1998ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சோனியா காந்தி முழுநேர தலைவராக இருந்தபோது, அவரது தலைமையின் கீழ் ஒருமித்த கருத்தாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் உறுதியான சக்தியாக அவர் நம்பப்படுகிறார். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.