கான்பூரின் உள்ளூர் ரவுடியான விகாஸ் துபே என்பவரை காவல் துறையினர் கைதுசெய்யச் சென்றனர். அப்போது, துபேவின் ஆட்கள் காவல் துறையினர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைவெறி தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் இரண்டு ரவுடிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் விசாரணையின்போது தப்பியோட முயன்ற இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கான்பூர் என்கவுன்டர் குற்றவாளியைப் பிடிப்பதில் உத்தரப் பிரதேச அரசு முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது. முழுமையான எச்சரிக்கை சூழல் நிலவியபோதும் குற்றவாளி விகாஸ் துபே, மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் வரை சென்றது பாதுகாப்பு குறைபாட்டுடன், காவலர்களுக்கு அவருடன் இருந்த ரகசிய தொடர்பும் வெளியாகியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
8 காவல் துறையினரை படுகொலை செய்த விகாஸ் துபே கைது! சிசிடிவி பதிவுகள்...
உத்தரப் பிரதேசத்தின் முக்கிய ரவுடியான விகாஸை கைதுசெய்த மத்தியப் பிரதேச காவல் துறையினருக்குப் பாராட்டுகளும் குவிந்துவருகின்றன. இதன் மீது பிகார் மாநில டிஜிபியான கேசவ் பிரசாத் மவுரியாவும் அம்மாநிலக் காவல் துறையினரை வாழ்த்தியுள்ளார்.
டிஜிபி மவுரியா கூறும்போது, ”துபேயை பிடிக்க உத்தரப் பிரதேச காவல் துறையினர் மிகவும் துரிதமாகச் செயல்பட்டனர். இதனால், வேறு எந்த வழியும் இல்லாததால், காவல் துறையினருக்கு அஞ்சி விகாஸ் வேறு மாநிலம் தப்பியுள்ளார். மத்தியப் பிரதேச அரசுக்கும் காவல் துறைக்கும் வாழ்த்துகள்” என்றார்.