கரோனா தொற்றுப் பரவல் காரணமான கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் மூடப்பட்டதால், முக்கியமான வழக்குகள் மட்டும் ஆன்லைன் மூலம் தற்போதுவரை தீர்க்கப்பட்டுவருகின்றன. இதனால் நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் புதுச்சேரி நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு, புதுச்சேரி நீதிமன்றங்களை உடனடியாகத் திறக்க வலியுறுத்தினர். அப்படி திறக்காத பட்சத்தில் நிவாரணமாக வழக்கறிஞர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், கடனாக ஐந்து லட்சம் ரூபாயும் வழங்குமாறு அரசிடம் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: இ-பாஸ் ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் உரிய அறிவிப்பை வெளியிடுவார் - ஆர்.பி.உதயகுமார்