மத்தியப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவராக வலம் வந்த ஜோதிராதித்திய சிந்தியா, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
நேர் எதிர்க்கட்சியான பாஜகவில் சிந்தியா இணைந்ததை ஏற்க மறுத்த காங்கிரஸ் தொண்டர்கள், மத்தியப் பிரதேசத்தில் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுக்க முழுக்க சீரழிந்திருப்பதாகவும், சிந்தியா மீதான தாக்குதல் முழுக்க முழுக்க கண்டனத்திற்குரியது என்றும் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சவுகான், அரசின் இயலாமையை இச்சம்பவம் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.