நாடு முழுவதும் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வெளியில் செல்லாமல் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுவரை 700க்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் சுகாதாரத்துறைச் செயலர் ஜெயந்தி ரவி கடந்த 12 மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் பரிசோதிக்கப்பட்ட எவருக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனோ அறிகுறி: பெண் தப்பி ஓட்டம்