கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைக்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியேவருகின்றனர்.
இருந்தபோதிலும் இயற்கைக்கு ஊரடங்கு இல்லையென்பதால், இயற்கை தன் பணிகளை அதிகமாக செய்துவருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த சிம்லா வானிலை மைய இயக்குனர் மன்மோகன் சிங், இன்று (ஜூலை.8) சிம்லா, சோலன் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் என்றும், ஜூலை 13ஆம் தேதி வரை மாநிலத்தில் மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மாநிலத்தில் அதிகபட்சமாக சோலனில் நேற்று (ஜூலை.7) மாலை மாலை 5:30 மணி முதல் இன்று (ஜூலை.8) காலை 8:30 மணி வரை 82 மிமீ மழை பெய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...இது பசு வதையல்ல... பசு வன்புணர்வு! சிக்கிய நபர்