ETV Bharat / bharat

நதிகள், ஊர்களுக்கு எல்லாம் பெண்கள் பெயர்... இந்தியாவில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: தீர்வு என்ன?

author img

By

Published : Oct 15, 2020, 5:17 AM IST

கடும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை விதிக்கப்படாவிட்டால் விசாரணை அமைப்புகளை சுய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கடந்த 2006ஆம் ஆண்டு, பிரகாஷ் சிங் வழக்கில், சட்டங்களை அமல்படுத்த காவல் துறையில் சீர்திருத்தங்கள் அவசியம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

rape cases
rape cases

கடந்த 2019ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடைபெற்றதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது ஏழு விழுக்காடு அதிகமாகும்.

இந்தியாவின் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர். இருப்பினும், ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நிகழ்வது நம் சமூகத்தில் ஏதோ குறைபாடு உள்ளதையே காட்டுகிறது. நல்ல நிர்வாகம் இல்லாததும் சட்டத்தின் மீது மக்களிடையே அச்சம் இல்லாததுமே இந்த நிலைமைக்கு காரணம் என ஏழு ஆண்டுகளுக்கு முன்பே, நீதிபதி வர்மா ஆணையம் கருத்து தெரிவித்தது.

இம்மாதிரியான குற்றங்களை களைய வழிகாட்டுதல்களோ சட்டத் திருத்தங்களோ போதாது. நோயின் மூலத்தை கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்த முதல் தகவல் அறிக்கையினை அதிகார வரம்பில்லாத காவல் நிலையங்களிலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய குற்றப்பிரிவு தண்டனைச் சட்டத்தின்படி, 60 நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் குறைபாடுகள் ஏற்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2013 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில், இந்திய குற்றப்பிரிவு தண்டனைச் சட்டம் 154இன் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. அதில், காவல்துறைக்கு வழிகாட்டுதலும் வகுக்கப்பட்டது.

அரசியல்வாதிகள், குற்றவாளிகள், குண்டர்கள் ஆகியோருடன் இணங்கி காவல்துறை செயல்பட்டால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். வழிகாட்டுதல்களை வகுப்பதற்கு பதில் குற்றங்களுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் குற்றங்கள் குறையும்.

குற்றங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் துணிவாக இருக்கும்போது அவர்களுக்கு அடிபணிந்து காவல்துறை செயல்பட்டால் சமூக நீதி எப்படி நிலைநாட்டப்படும்? நீதித்துறையை வலுப்படுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி விஎன் காரே ஐந்து ஆலோசனைகளை கூறியுள்ளார். குற்றங்களை நிரூபிக்க தேர்தல் ஆணையத்திற்கு இணையாக சுதந்திரமாக செயல்படும் விசாரணை அமைப்பு தேவை என அவர் கருதுகிறார்.

சுதந்திரமான விசாரணை, சாட்சியங்களின் முக்கியத்துவத்தைக் கருதி மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளிக்க வேண்டும் போன்ற ஆலோசனைகள் அதில் இடம் பெற்றுள்ளன. சாட்சியங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, குற்றவாளிகள் விடுதலை ஆகும் பட்சத்தில் மேல்முறையீடு செய்யும் அதிகாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி கருதுகிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, அரசின் சார்பாக ஆஜராகும் நீதிபதிகளை நியமனம் செய்வதில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என சட்ட ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.