உலகளவில் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்நோய்ப் பரவல் வேகமாக அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்த பிரிட்டன் பரிந்துரைத்த டெக்சாமெத்தோசோன் உள்ளிட்ட மருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டு இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இந்நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்நிலையில் ஸ்பெயினில் நடத்திய ஆய்வில் வெறும் கரோனா நோயால் ஐந்து விழுக்காடு மக்களுக்குத்தான் உடம்பில் நோயை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி இருக்கக்கூடும் என்றும்; மேலும் இந்த தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சமாக இந்நோய் பாதிக்கப்படாத 70 விழுக்காடு மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கப்பெற்றால், அவர்களுக்கு இந்நோய் பரவுவதைக் கட்டுபடுத்தலாம் என்று ஸ்பானிஷ் அறிவியல் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையானது சுவிட்சர்லாந்து நாட்டை மையாகக் கொண்டு இயங்கும் வரும் லான்சட் இதழில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கிண்டியில் அதிநவீன கரோனா மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சர்...!