ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்தத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியிலுள்ள மருத்துவமனையில் சிறை விதிகளை மீறியுள்ளார் என ஜார்க்கண்ட் மாநில பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாஹ்தியோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
கால்நடைத் தீவின ஊழல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக்காலத்தின் பெரும் பகுதியை அவர், ராஞ்சியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போது செலவிட்டு வருகிறார்.
இந்தச்சூழ்நிலையில், அவர் மருத்துவமனையில் தனது தர்பாரை ஏற்படுத்தியுள்ளதாக ஜார்க்கண்ட் பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ராஞ்சியிலுள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் யாதவ், பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தாவை மருத்துவமனையில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் வெளியானது.
அதில், லாலு பிரசாத் செல்போன் பயன்படுத்துவது பதிவாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தை தனது முகநூலில் பதிவிட்ட ஜார்க்கண்ட் மாநில பாஜக செய்தித்தொடர்பாளர், “மருத்துவமனையில் சிறை விதிகளை மீறியுள்ள பிகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜார்க்கண்ட் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கேரள தங்கக் கடத்தல்: ஃபாசில் ஃபரீத்திடமிருந்து பெற்ற வாக்குமூலம்!