பிகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்ததால், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் தொற்று இல்லை என உறுதியானது. இந்நிலையில், அவரது மனைவி ராப்ரி தேவி மகன் தேஜஸ்வினி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் மருத்துவமனையில் லாலுவை சந்தித்தனர்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மிக மோசமாகவுள்ளதால் உயர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் ஒரே நாளில் 14,256 புதிய பாதிப்பு