சர்தார் வல்லபாய் படேலை தொடர்ந்து தற்போது பாஜக மற்றொரு காங்கிரஸ் தலைவருக்கு மரியாதை செய்துள்ளது. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை வாரணாசி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
முன்னதாக விமான நிலையத்துக்கு வந்தடைந்த மோடியை, லால் பகதூர் சாஸ்திரியின் இளைய மகனும், பாஜக மூத்த தலைவருமான சுனில் சாஸ்திரி வரவேற்றார். எந்த கட்சியைச் சேர்ந்த தலைவராக இருந்தாலும், அவருக்கு பாஜக மரியாதை செய்து வருவது வழக்கமாகிவிட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கி பாஜக அரசு மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.