புதுச்சேரி ஜெயராம் நகரை சேர்ந்தவர் ஆனந்த். சுமை தூக்கும் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவரது மனைவி கீதா, இவர் ஆனந்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று ஆனந்த் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். பணம் கொடுக்காததால், ஆத்திரத்தில் வெளியே சென்று மது அருந்திய ஆனந்த், மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கணவர் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது, ஆனந்த் வீட்டில் இருந்த கத்தியால் கீதாவை சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் புதுச்சேரி கோரிமேடு காவல் நிலையத்தில் சரணடைந்த அவரை, போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.