கோட்டயம் (கேரளா): முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் ஆட்டோ ஓட்டுநர் லட்சுமி அம்மாள்.
கரோனா பொது முடக்கம் இவரின் வருமானத்தை தளர்த்தியபோதும், தான் தளராமல் கரோனா நோயாளிகளுக்கு சேவை செய்து வருமானமும் ஈட்டி வருகிறார். 2002 முதல் ஆட்டோ ஓட்டிவரும் இவர், தற்போது கரோனா சிகிச்சை மையத்தில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் பணிபுரிந்து வருகிறார்.
பொது முடக்கத்தின் போது, ஆட்டோ ஓட தடை இருந்ததால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு விநியோகம் செய்து வருமானத்தை ஈட்டியுள்ளார் லட்சுமி. பின்னர் இதுகுறித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்தார், கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் லட்சுமிக்கு வேலை கிடைக்க வழிவகை செய்துள்ளனர்.
75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போன ஒரு கிலோ தேயிலைத் தூள்!
அதனையும் சிறப்பாக செய்துவரும் லட்சுமி, குணமடைந்த நோயாளிகளை அவரவர்தம் வீடுகளுக்கு கொண்டு விடும் வேலையையும் செய்துவருகிறார். சாதகமான சூழல் வரும் வரை காத்திருப்போர் மத்தியில், சூழலை நமக்கேற்றவாறு சாதகமாக்கிக் கொள்வது எப்படி என்று லட்சுமி போன்ற திறன்மிகு பெண்களிடம் கற்றுகொள்ளவேண்டும் என்பதே இவரின் கதை நமக்கு தெளிவுப்படுத்துகிறது.