ETV Bharat / bharat

இந்தியா-சீனா இடையேயான முக்கிய மோதல்களின் வரலாறு - லடாக் இந்தியா சீனா் எல்லை மோதல்

லடாக் எல்லை விவகாரத்தை சுமுகமாக முடித்துக்கொள்ள இந்திய-சீன தரப்பினர் ஒப்புக்கொண்டுள்ள சூழலில், இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மோதல்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்.

ladakh standoff
ladakh standoff
author img

By

Published : Jun 8, 2020, 12:04 PM IST

கிழக்கு லடாக் பகுதியில் லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் என்று அழைக்கப்படும் இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவிவந்தது.

இந்நிலையில், இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இம்மோதலை அமைதியான முறையில் தீர்க்க சீனா ஒப்புக்கொண்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது.

இந்தியா-சீனா இடையே எல்லைகளில் மோதல் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்தே சீனாவுடன் இதுபோன்ற மோதலை நாடு சந்தித்துவருகிறது.

அதில் குறிப்பிடத்தக்க மோதல்கள் பற்றியும், அது எதனால் நிகழ்ந்ததென்பது குறித்தும் பார்ப்போம்...

1962 - அக்டோபர் 20ஆம் தேதி இந்தியப் படைகளைச் சீனா தாக்கியது. இதனால் இருநாட்டுக்கும் இடையே போர் வெடித்தது. நவம்பர் 21ஆம் தேதிவரை நீடித்த இந்தப் போரின்போது, 10-20 ஆயிரம் இந்தியப் படையினர், 80 ஆயிரம் சீனப் படையினரை எதிர்கொண்டனர். இறுதியில் சீனாவின் போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது.

1967 - இந்தோ-சீனா போர் முடிந்த ஐந்தே ஆண்டுகளில் இருநாட்டுக்கும் இடையே சிக்கிம் எல்லையில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 80 வீரர்கள் வீரமரணமடைந்தனர். 300-400 சீன ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

1987 - அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள சும்தொரோங் சூ எல்லைப் பகுதியில் எழுந்த மோதலால் இந்தியா-சீனா இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் உருவானது. ஆனால், இந்தியாவின் எச்சரிக்கையான ராஜதந்திர நகர்வுகளால் சீனா பேச்சுவார்த்தைக்குச் செவிமடுத்தது.

இந்த மோதல் இருநாட்டு நல்லுறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1988ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அவர் எல்லையில் ராணுவ சமநிலையைக் கடைப்பிடிப்பது குறித்து அந்நாட்டு பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2013 - ஏப்ரல் மாதம் லடாக்கின் தௌலத் பெக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியில் ராணுவ முகாம்களை அமைத்தது. இந்திய வான் பகுதியில் சீன ஹெலிகாப்டர்கள் ஊடுருவியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இந்தியாவும் அதன் பங்கிற்கு ராணுவ முகாம்களை அமைத்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு, இருதரப்பு ராணுவமும் பின்வாங்கியதால் மோதல் முடிவுக்கு வந்தது.

2014 - செப்டம்பர் மாதம் சர்ச்சைக்குரிய தேம்சோக் கிராமத்தில் இந்திய தொழிலாளர்கள் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன ராணுவத்தின் உதவியோடு அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியில் சீனவும் ராணுவ முகாம் அமைத்ததாக இந்தியத் தரப்பு குற்றஞ்சாட்டியது. இது மோதலாக உருவெடுத்து மூன்று வாரங்கள் நீடித்தது.

2015 - செப்டம்பர் மாதம், வடக்கு லடாக்கில் உள்ள பூர்த்சே பகுதியில் சீன ராணுவம் கட்டிவந்த கண்காணிப்பு கோபுரத்தை இந்தியத் தரப்பு இடித்ததை அடுத்து, சீனாவுடன் மோதல் ஏற்பட்டது.

2017 - ஜூன் 16ஆம் தேதி, சர்ச்சைக்குரிய டோக்லாம் பீடபூமியில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியை முடுக்கிவிட்டது. இந்தச் சீண்டலால் ஆத்திரமடைந்த இந்தியா சாலை அமைப்புப் பணியை ஜூன் 18ஆம் தேதி தடுத்து நிறுத்தியது.

இதன் காரணமாக, இருநாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு குவிக்கவே அங்கு போர் மேகம் சூழ்ந்தது. இரண்டு மாதம் நீடித்த இந்த மோதல் அமைதிப் பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டது.

இதையும் படிங்க : உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.