லடாக்கின் கிழக்கில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்துக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே ஜூன் 15-16ஆம் தேதி நள்ளிரவில் வன்முறை தாக்குதல் நடந்தது.
இந்தத் தாக்குதலையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனப் பொருள்கள் விற்பனைக்கு நாட்டில் தடை விதிக்க வேண்டும் என்றும் கருத்துகள் மேலோங்குகிறது.
இந்நிலையில் இந்திய விமானப் படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ். பதௌரியா ஜம்மு காஷ்மீர் மற்றும் லே பகுதிகளுக்கு சென்று இரண்டு நாள்கள் ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் அவர் வெள்ளிக்கிழமை (ஜூன்19) டெல்லி திரும்பினார்.
அப்போது, போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில், விமான நிலையங்கள் கடும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா நடத்திய கொடூர வன்முறை தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என அமெரிக்க நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. எனினும் சீனத் தரப்பில் உயிர் இழப்புகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: மாஸ்கோ அணிவகுப்பில் பங்கேற்க ராஜ்நாத் சிங்கிற்கு ரஷ்யா அழைப்பு?