ETV Bharat / bharat

மத்திய அரசு நடவடிக்கை: புத்துயிர் ஊதுபத்தி தொழில்

author img

By

Published : Jun 12, 2020, 8:57 PM IST

Updated : Jun 13, 2020, 1:24 PM IST

டெல்லி: மத்திய அரசின் நடவடிக்கையால் ஊதுபத்தி தொழில் மீட்சி கண்டுள்ளது. வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவை பெருகியுள்ளது.

ஊதுபத்தி
ஊதுபத்தி

இந்த அறிவிப்புகள், ஊதுபத்தி தொழிலையும், மூங்கில் தொழிற்சாலைகளையும் வளர்க்கும் என்று கதர் கிராம மையத்தின் தலைவர் வினய் குமார் சக்ஸேனா கூறினார். முன்னதாக, நாட்டில் உள்ள தொழில்களும், குடிசைத் தொழில்களும் வளர்ச்சியை பெற, மத்திய சிறு, குறு தொழில் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முயற்சி மேற்கொண்டார். அதன் விளைவாக இந்த வரி உயர்வை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என்று கூறப்படுகிறது.

22 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றுகிறது ஜெர்மன் விமான நிறுவனம்!

இறக்குமதி வரியை உயர்த்திய நிலையில், உள்நாட்டில் உள்ள மூங்கில்களை ஊதுபத்தி தயாரிப்பாளர்கள் நாடுவர். அதன்மூலம் உள்நாட்டில் உற்பத்தி பெருகும். அதே வேளையில் வேலைவாய்ப்புகளும் கூடும். சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்வதால் உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகிறது. நாள் ஒன்றுக்கு 1,490 டன் ஊதுபத்திகள் உள்நாட்டு தேவையாக இருக்கிறது. ஆனால் 760 டன் ஊதுபத்திகள் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பெருமளவில் இதை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

2009ஆம் ஆண்டில் வெறும் 2 விழுக்காடாக இருந்த ஊதுபத்தியின் அளவு, 2019ஆம் ஆண்டில் நிலவரப்படி 80 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதுவே ரூபாய் மதிப்பில், 2009ஆம் ஆண்டில் 31 கோடி ரூபாயாக இருந்த இறக்குமதி, 2019ஆம் ஆண்டில் 546 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நம் நாட்டில் புழங்க வேண்டிய பணம் என்பதை மத்திய அரசு சரியாக புரிந்துகொண்டுள்ளது.

விமான பயணம் ரத்து: கட்டணத்தை திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 30 விழுக்காடாக இருந்த வரியை 10 விழுக்காடாக குறைத்தனர். அதன் விளைவு 25 விழுக்காடு ஊதுபத்தி தயாரிப்பு நிறுவனங்கள் இழப்புகளை சமாளிக்க முடியாமல் தங்களின் நிறுவனங்களை மூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 13, 2020, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.