ETV Bharat / bharat

ரோஜா வனம் நிகழ்வின் மூலம் குஷ்பூ மூவருக்கு “சவால்“ விடுத்துள்ளார்!

ஹைதராபாத்: கிரீன் இந்தியா சேலஞ்ச்சை ஏற்று 'ரோஜா வனம்' நிகழ்வின் ஒரு பகுதியாக பிரபல நடிகை குஷ்பூ மரக்கன்று நட்டார். தொடர்ந்து மூவருக்கு “சவால்“ விடுத்துள்ளார்.

author img

By

Published : Mar 1, 2020, 6:49 PM IST

Updated : Mar 1, 2020, 6:59 PM IST

Kushboo participate in green india challenge
'ரோஜா வனம்' நிகழ்வில் குஷ்பூ ரோஜா

கிரீன் இந்தியா சேலஞ்ச்சின் ஒரு பகுதியான ரோஜா வனம் நிகழ்வி்ல் பிரபல நடிகை குஷ்பூ பங்கேற்று மரக்கன்று நட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் நமது தேசத்தை பசுமையான சூழ்நிலை நிலவும்படி மாற்றும் முயற்சியாக கிரீன் இந்தியா சேலஞ்ச் மற்றும் ரோஜா வனம் நிகழ்வின் மூலம் மரக்கன்றுகளை நட்டு பிரபலமானவர்களிடம் இது குறித்து சவால் விடுத்தார்.

அதாவது சவாலினை ஏற்கும் நபர், தான் மரக்கன்றுகளை நட்டபிறகு மேலும் மூவர் இதுபோன்று மரக்கன்றுகள் நடும் வகையில் அவர்களுக்கு சவால் விடுக்க வேண்டும். இதுபோல் அடுத்தடுத்து சவாலை ஏற்கும் நபர்கள் தொடர்ந்து மூன்று நபர்களுக்கு சவாலை கடத்துவதினால் இது தொடர் நிகழ்ச்சியாக நடைபெறும். இதனால் பசுமையான நாட்டை உருவாக்க முடியும்.

'ரோஜா வனம்' நிகழ்வில் பங்கேற்ற குஷ்பு

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகரி சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகையுமான ரோஜாவின் சவாலை ஏற்ற நடிகர் அர்ஜுன் மரக்கன்று நட்டபிறகு மேலும் மூன்று பேரை இந்த நிகழ்வில் பங்கேற்க வைத்தார். மூவரில் ஒருவரான நடிகை குஷ்பு ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆலையில் பசுமை சவாலை ஏற்று மரக்கன்று நட்டு சவாலை முடித்து வைத்தார். நிகழ்ச்சியில் நடிகையும் நகரி சட்டப்பபேரவை உறுப்பினருமான ரோஜா உடனிருந்தார்.

பின்னர் பேசிய அவர், "நான் ரோஜாவனம் சவாலை ஏற்றேன். அதன்படி என் சவாலை இன்று நிறைவேற்றியுள்ளேன். இதன் தொடர்ச்சியாக நான் மூவரை இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் சவால் விடுக்கவேண்டும். மூவரில் ஒருவர் நடிகை மீனா, அடுத்தவர் நடன இயக்குனர் பிருந்தா, மூன்றாவது நபர் நடிகை சுகாசினி ஆவர். இந்த மூவரும் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வர்.

'ரோஜா வனம்' நிகழ்வில் பங்கேற்ற குஷ்பு

மேலும் நடிகை ரோஜாவைப்பற்றி கூறவேண்டுமானால், ரோஜா திறம்பட அவரின் கடமையை நிறைவேற்றியுள்ளார். அவர் அரசியல் துறையிலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகின்றார். அவருக்கு என் வாழ்த்துகள்" என்றார்.

இதையும் படிங்க:'லால் சிங் சத்தா' பட அப்டேட்: மிலிட்டரி உடையில் ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆமீர் கான்

Last Updated : Mar 1, 2020, 6:59 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.