கர்நாடகா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவிடம், குமாரசாமி வழங்கினார்.
பின்னர், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த அரசு அமையும் வரை காபந்து முதலமைச்சராக தொடர குமாரசாமியை கேட்டுக் கொண்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, "15 -16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மீறியுள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தை மீறியதால், அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்படலாம்" என்றார்.