தெலங்கானாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாநில போக்குவரத்துக் கழக (TSRTC) ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்நாடகாவில் இருந்து தெலங்கானாவிற்கு செல்லும் கர்நாடகா பேருந்துகளின் போக்குவரத்து நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் போக்கவரத்து சேவையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், வார இறுதி நாட்கள் என்பதால் கர்நாடகா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடகாவில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி சிறப்பு பேருந்து வசதி - வெளியூர் பயணிகள் உற்சாகம்!