கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டன.
இதனிடையே ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் மாநில போக்குவரத்து தொடங்கப்பட்டது. கர்நாடக போக்குவரத்து கழகம் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் பேருந்துகளின் மாற்றம் மேற்கொண்டுள்ளது.
மாற்றத்தின் ஒரு அங்கமாக 4 வரிசை கொண்ட பேருந்து இருக்கை மூன்று வரிசையாக குறைக்கப்பட்டுள்ளது. 39 இருக்கைகள் கொண்ட பேருந்து 29 இருக்கைகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனாவிற்கு அடுத்த செக்: செப்., 1 முதல் பொம்மைகளுக்கும் தர பரிசோதனை!