ETV Bharat / bharat

பிளாஸ்டிக் ஒழிப்பில் சின்னசாமி மைதானம்! - ksca-sets-up-plastic-bottle-shredder-at-chinnaswamy-to-combat-waste

பெங்களுரு: பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் விதமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தூளாக்கும் இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ளது.

சின்னசாமி மைதானம்
சின்னசாமி மைதானம்
author img

By

Published : Jan 19, 2020, 3:28 PM IST

சூரிய மின்சக்தி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நடவடிக்கைகளை கர்நாடக கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டுவருகிறது. கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக, பிளாஸ்டிக் தூளாக்கும் இயந்திரத்தை சின்னசாமி மைதானத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் வைத்துள்ளது. கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஜர் பின்னி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் தூளாக்கும் இயந்திரம் சின்னசாமி மைதானத்தில் பொறுத்தப்பட்டது.

இதுகுறித்து கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஜர் பின்னி கூறுகையில், "பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் விதமாக ஒரு முயற்சியை தொடங்கியுள்ளோம். பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிர்காலத்தில் தடை விதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். முதன்முறையாக, பிளாஸ்டிக் தூளாக்கும் இயந்திரத்தை பொறுத்தியுள்ளோம். இதன்மூலம், 85 விழுக்காடு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் இதனை செய்துவருகிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநிலத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். இதனை முன்னெடுப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது" என்றார்.

சின்னசாமி மைதானம்

ஆண்டுக்கு, நான்கு லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை இயந்திரம் தூளாக்குகிறது. தூளாக்கப்பட்ட துகள்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு தொப்பிகள், சட்டைகள், காலணிகள் போன்றவையாக மாற்றப்படுகிறது. கிரிக்கெட் சங்கத்தின் இந்த நடவடிக்கையை மாநிலமே பின்பற்றும் அளவுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என பின்னி நம்பிக்கை கூறியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து நல்ல தாக்கத்தை சமூகத்தில் உண்டாக்கும் என கர்நாடக கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் பாத்திர வங்கி

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.