ETV Bharat / bharat

‘ரஜினிக்கு அரசியல் வராது’ - கே.எஸ்.அழகிரி - rajini

விழுப்புரம்: இந்தியா என்பது இந்தி பேசும் 5 மாநிலங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி
author img

By

Published : Jul 16, 2019, 9:38 AM IST

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு பேசினார். அப்போது, "நாட்டிலேயே அதிகம் படித்தவர்கள் என்ற பெருமையைத் தமிழகம் பெற்றிருப்பதற்குக் காமராஜர் தான் காரணம். தற்போதைய ஆட்சியாளர்கள் இந்தி, ஆங்கில மொழியில்தான் தேர்வு என நிர்பந்தம் செய்கின்றனர்.

தாய்மொழியில் தேர்வு எழுதுவதே முழுமை அடையும். தமிழகத்திற்கான மத்திய அரசின் 10,500 வேலை வாய்ப்புகளில் தமிழ் தெரிந்தவர்கள் வெறும் 561 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இந்தியா என்பது இந்தி பேசும் ஐந்து மாநிலங்களுக்கானது அல்ல. அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ரயில்வே துறையைத் தனியார் மயமாக்க பிரதமர் மோடி முயல்கிறார். இளைஞர்கள் இதை எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால், ரஜினியின் ஆதரவு யாருக்கு என தேவையில்லாததைப் பற்றிப் பேசி வருகின்றனர். சினிமா வேறு, அரசியல் வேறு. ரஜினிக்குத் தமிழக அரசியல் ஒத்து வராது. அவருக்குத் தெரிந்ததை மட்டும் அவர் செய்தால் போதும்” என்றார்.

Intro:விழுப்புரம்: இந்தியா என்பது இந்தி பேசும் 5 மாநிலங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.Body:விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது.,

"நாட்டிலேயே அதிகம் படித்தவர்கள் என்ற பெருமையை தமிழகம் பெற்றிருப்பதற்கு காமராஜர் தான் காரணம்.

தற்போதைய ஆட்சியாளர்கள் இந்தி, ஆங்கில மொழியில்தான் தேர்வு என நிர்ப்பந்தம் செய்கின்றனர். தாய்மொழியில் தேர்வு எழுதுவதே முழுமை அடையும்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் தெரியாதவர்கள் வந்து கலாசாரப் படையெடுப்பு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திற்கான மத்திய அரசின் 10,500 வேலை வாய்ப்புகளில் தமிழ் தெரிந்தவர்கள் வெறும் 561 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

இந்தியா என்பது இந்தி பேசும் 5 மாநிலங்களுக்கு மட்டுமானது அல்ல. அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்க பிரதமர் மோடி முயல்கிறார். இளைஞர்கள் இதை எதிர்த்து போராட வேண்டும்.

ஆனால், ரஜினியின் ஆதரவு யாருக்கு என தேவையில்லாததை பற்றி பேசி வருகின்றனர். சினிமா வேறு, அரசியல் வேறு.

ரஜினிக்கு தமிழக அரசியல் ஒத்து வராது. அவருக்கு தெரிந்ததை மட்டும் அவர் செய்தால் போதும்.

Conclusion:தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை போக்க அரசு முன்னேற்பாடுகளைச் செய்ய வில்லை" என்றார்.

இந்த கூட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆர். டி. வி. சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.