புதுச்சேரி மாவட்டம் அருகே உள்ள விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஆரோவில் பகுதி இங்கு பெரும்பாலும் வெளிநாட்டினர் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பாதிப்பைத் தடுக்கும்விதமாக, புதுச்சேரி-விழுப்புரம் ஆகிய இரு மாவட்ட ஆட்சியாளர்கள், மருத்துவக் குழுவுடன் மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆரோவில் பகுதி அருகே நடைபெற்ற இந்த ஆய்வின்போது, அப்பகுதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, புதுச்சேரி விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று குறித்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றும், ஆரோவில் பகுதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்குக் கண்டறிதல் சோதனைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அப்பகுதில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது என்றும், இங்குள்ள வெளிநாட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோவிட்-19 எதிரொலி: புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட்ட வாடா!