அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 36 மணி நேர இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பினார். அவர் ஜெர்மன் வழியாக அமெரிக்கா செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துகளைக் கூறி அனுப்பினர். முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிபர் ட்ரம்புக்கு விருந்து அளிக்கப்பட்டது.
அந்த விருந்து உணவுப் பட்டியலில் அமுஸ் பவுச், உருளைக்கிழங்கு திக்கி, எலுமிச்சை சுவைப்பு, தும் கூச் மாதர், தும் கோத் பிரியாணி, தேக் கி பிரியாணி, ரான் அலிசன், தால் ரைசினா, வெண்ணிலா ஐஸ் க்ரீம் உள்ளிட்ட வகைகள் இருந்தன.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்த ஐந்தாம் நூற்றாண்டு புத்தர் சிலையை ட்ரம்ப் வெகுவாக ரசித்தார். அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: இந்தியாவில் வன்முறைக்கு இடமில்லை - காங்கிரஸ்