ETV Bharat / bharat

மலைக் குரங்குகளுக்கு உணவளித்த காவலர்கள்!

பெங்களூரு: உணவின்றி தவித்த மலைக் குரங்குகளுக்கு காவலர்கள் உண்ண உணவு அளித்தனர்.

Koppal police  monkeys starving  Sri Male Malleshwara temple  good samaritans  மலை குரங்குகளுக்கு உணவளித்த காவலர்கள்  கரோனா பீதி, 21 நாள்கள் பூட்டல், வனவிலங்குகளுக்கு உணவளித்த காவலர்கள், காவலர்களின் மனித நேயம்  Koppal police turn good samaritans, feed monkeys and cattle

author img

By

Published : Mar 29, 2020, 7:56 PM IST

அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொப்பால் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் மூன்று மலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த இயற்கை அழகை காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

இது மட்டுமின்றி வானுயர்ந்த கோட்டைகளும் இங்கு உள்ளது. இந்தக் கோட்டைகளில் வரலாற்று சிறப்புகள் புதைந்துள்ளன. இங்கு மற்றொரு சிறப்பு மல்லேஸ்வரர் கோயில்.

இக்கோயிலை சுற்றிலும் வானரங்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இங்கு வரும் பக்தர்கள், இந்தக் குரங்குகளுக்கு உணவளிக்க மறக்க மாட்டார்கள்.

மலைக் குரங்குகளுக்கு உணவளித்த காவலர்கள்!

இந்நிலையில் தற்போது கரோனா பரவலை தடுக்கும் வகையில் 21 நாள்கள் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் (லாக் டவுன்) காரணமான வனவிலங்குகளும் உண்ண உணவின்றி தவிக்கின்றன. தற்போது கோடைக் காலம் என்பதால் தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.

இந்த நிலையில் மல்லேஸ்வரர் கோயில் பகுதி மலைக் குரங்குகளுக்கு அப்பகுதி காவலர்கள் உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் சென்று உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து உதவினர்.

காவலர்கள் கைகளில் இருந்த உணவுப் பொட்டலங்கள் மற்றும் பழங்களை தட்டிப் பறித்து குரங்குகள் பசியாற்றிக் கொண்டது. இது குறித்து உதவி ஆய்வாளர் சுரேஷ் கூறுகையில், “21 நாள்கள் பூட்டுதல் காரணமான வன விலங்குகள் உண்ண உணவு மற்றும் தண்ணீரின்றி தவிக்கின்றன. அதன் பசியை போக்கி, தாகத்தை தீர்ப்பதும் எங்களது பணிதான்” என்றார்.

இதையும் படிங்க: கரோனா பரவலை தடுக்க 49 நாள் அடைப்பு அவசியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.