மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவின் அடையாளமாக திகழும் ஹவுரா பாலத்தில், பிரமாண்ட வண்ண விளக்குளால் ஜோலிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி கொல்கத்தா போர்ட் டிரஸ்டின் 150ஆம் ஆண்டு விழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதால், அப்பகுதியில் காவல் துறை அதிகளவில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நிகழ்ச்சியில் இசைக்கு ஏற்றவாறு வண்ண விளக்குகள் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்கவரும் நிகழ்ச்சியானது இரண்டரை நிமிடம் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தெலுங்கு தேசம் லோகேஷ் வீட்டுச் சிறையில் வைப்பு!