கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்னணி நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகளுக்கு, அவசர பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கபட்டுள்ளது. இதனிடையே, நேற்று (டிச.17) ரஷ்யா தயாரித்த கரோனா தடுப்பூசியான "ஸ்புட்னிக்-வி" 95 விழுக்காடு பயன் அளிப்பதாக, அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பியர்லெஸ் மருத்துவமனையில் 100 தன்னார்வலர்களுக்கு "ஸ்புட்னிக்-வி" அளிக்கப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ளது. இதற்கு மருத்துவமனை வழிகாட்டுதல் கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது.
மருத்துவர் சுவராஜ்யோதி பவுமிக் தலைமையில் இந்த பரிசோதனை நடைபெறவுள்ளது. இந்த மாதத்தில் பரிசோதனை நடத்த அனுமதி வாங்கிய ஒரே மருத்துவமனை பியர்லெஸ் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.