டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற நகரங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த ஆண்டு கரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய நகரங்களில் காற்று மாசு குறைவாகவே இருந்தது. இருப்பினும், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியதால், காற்று மாசு வழக்கம்போல் அதிகரித்து.
இதன் காரணமாக இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிக்கைக்கு பட்டாசுகளை வெடிக்க பல்வேறு மாநிலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், பொதுமக்கள் அரசின் தடையை முறையாகப் பின்பற்றாததால், பல நகரங்களில் காற்று மாசு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளிலும் காற்றின் தர மதிப்பீடு 200க்கு மேல் இருந்தது.
தீபாவளி அன்று AQI | ஞாயிற்றுக்கிழமை AQI | |
வடக்கு கொல்கத்தா | 226 | 287 |
தெற்கு கொல்கத்தா | 142 | 187 |
மத்திய கொல்கத்தா | 115 | 146 |
கிழக்கு கொல்கத்தா | 146 | 151 |
அதேபோல கொல்கத்தாவின் மற்ற பகுதிகளிலும் காற்றின் தர மதிப்பீடு 300 முதல் 500 வரை இருந்ததாக மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம் 0 முதல் 50க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள். அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100 வரை இருந்தால் 'திருப்தி' என்றும், 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.
அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் மீதான வரி ஏய்ப்பு வழக்கு