புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் இருக்கும் ரவடிகள் சிலர் வெளியில் இருக்கும் தங்களது நண்பர்கள் மூலம் தங்களது வழக்கு செலவிற்காக் தொழிலதிபர்களை மிரட்டி பணம் கேட்பது, சிறையிலிருந்தே கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறை அறைகளிலிருந்து தொடர்ந்து செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருவதும் வழக்கமாக உள்ளது.
இவர்களது நடவடிக்கைகள் புதுச்சேரி காவல் துறையினருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமல்லாமல், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சிறைத்துறை அலுவலர்கள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதில் பிரபல ரவுடிகள் ஐந்து பேரை புதுச்சேரி சிறையிலிருந்து வெளி மாநில சிறைக்கு மாற்று அனுமதி வழங்குமாறும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், கிரண்பேடி காவல் துறையின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் ஐந்து பேரும் ஓரிரு வாரங்களில் வெளிமாநில சிறைக்கு மாற்றப்பட உள்ளனர் என காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: விசாரணைக்கு காத்திருக்கும் 69% சிறைக் கைதிகள்