இதுதொடர்பாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ருத்ரா கவுடு மற்றும் அலுவலர்களுடன் துறை செயல்பாடுகள் குறித்து கவர்னர் கிரண்பேடி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதில் பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒரு வகுப்பு நடத்தவேண்டும். ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் முறையை கூர்ந்து கவனிக்க வேண்டும். மாணவர் பெற்றோர் கூட்டம் நடத்தி மாணவர்களின் நிலை பற்றி ஆராய வேண்டும்.
எதிர்கால படிப்பு திட்டத்தை பற்றி தெளிவற்ற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாக்கவேண்டும். போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்ய முன்னாள் மாணவர்களின் உதவியை நாடவேண்டும். பள்ளி நூலகர்கள் பள்ளியில் தேங்கியிருக்கும் பாடநூல்கள், குறிப்பேடுகள், சைக்கிள்கள், சீருடைகள் ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் எந அறிவுறுத்தப்பட்டது.
மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி காலை அரசு பள்ளி மாணவர்களுடன் பொறுப்புள்ள குடிமகன்களாக மாணவர்களை வளரச் செய்தல் என்ற தலைப்பில் காணொலி காட்சி மூலம் ஆளுநர் உரையாட ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பார்க்க தாமரை போல இருக்கு' - டிராகன் பழத்தின் பெயரை 'கமலம்' என்று மாற்றிய குஜராத் அரசு!