புதுச்சேரி தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இரண்டு காதல் ஜோடிகளிடம் இரண்டு காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டனர். இது குறித்து விசாரணை நடத்திய காவல் துறை உயர் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட காவலர்களான சதீஷ், சுரேஷ் குமார் ஆகிய 2 பேரை பணி இடை நீக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் புதுச்சேரி நேரு வீதியுள்ள பெரிய கடை காவல் நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இதுகுறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த காவல் அலுவலர், காவலர்களிடம் பேசிய கிரண்பேடி,' இவ்விவகாரத்தில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளவே நான் ஆய்வுக்கு வந்துள்ளேன். விடுதிக்கு காவலர்கள் யார் யாருடைய உத்தரவின் பேரில் அங்கு சென்றனர். இந்த விவகாரத்தில் தவறு நடந்து இருந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆய்வின் நோக்கம் உங்கள் பணியை மேம்படுத்திக் கொள்வதற்கான ஆலோசனை மேற்கொள்ளவே வந்துள்ளேன். தவறு செய்திருந்தால் அலுவலர்களாக இருந்தாலும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி காவல்துறை புகார்களின் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். பின்னர் அங்கிருந்து கிரண்பேடி ஐபிஎன் படைப்பிரிவு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கிரண் பேடி உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு