ETV Bharat / bharat

அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு செலவு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவு - புதுச்சேரி

புதுச்சேரி: அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு அரசு சார்பு நிறுவனங்கள் செலவு செய்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

bedi
author img

By

Published : Jun 26, 2019, 12:12 PM IST

புதுச்சேரி அமைச்சர்களின் அலுவலக செலவுக்கு அரசு சார்பு நிறுவனங்கள் முறைகேடாக பணத்தை செலவு செய்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவலை பெற்றுள்ளார். அதில் வருவாய்த்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு அரசு நிறுவனமான பிப்டிக் நிறுவனத்தின் பணத்தில் எழுதுபொருட்கள், நாற்காலி, எலக்ட்ரானிக் ஸ்டவ், வேக்வம் கிளீனர் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியிருப்பதாகவும், சமூகநலத்துறை அமைச்சர் அலுவலத்திற்கு டீ வாங்குவதற்காக, கடந்த நான்கு மாதங்களாக அரசு நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனத்திலிருந்து 15 ஆயிரத்து 980 ரூபாய் செலவு செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து புதுச்சேரி அமைச்சர் அலுவலகங்களுக்கு விதிமுறைகளை மீறி, அரசுத் துறை மற்றும் சார்பு நிறுவனங்களின் நிதி செலவு செய்யப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோருக்கு ஆதாரத்துடன் மனு அனுப்பி உள்ளது.

அந்த மனுவில், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின்படி, அமைச்சரவைக்கு அரசு சார்ந்த நிறுவனங்களிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே பல அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே அமைச்சர் அலுவலகங்களுக்கு, அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறையிலிருந்து செலவு செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டிருக்கும் தகவலில், 'யார் சட்டவிதிகளை மீறினாலும் அதற்கான பதிலைக் கூற அவர்கள் கடமைப்பட்டவர்கள். அமைச்சர் அலுவலக செலவு விவகாரம் தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டவிதிகளை மீறி உதவி புரிந்தவர்களும் அதற்கு பதில் அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு அரசு சார்பு நிறுவனங்களும் நிதியை செலவு செய்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்

புதுச்சேரி அமைச்சர்கள் அலுவலக செலவுக்கு அரசு சார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளுக்கு பணம் முறைகேடாக செலவு செய்திருப்பதாக புகார்கள் எழுந்தது இதுதொடர்பாக ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவலை பெற்றுள்ளார் அதில் வருவாய்த்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு அரசு நிறுவனமான பிப்டிக் நிறுவனத்தில் இருந்து பணத்தில் எழுதுபொருட்கள், நாற்காலி, எலக்ட்ரானிக் ஸ்டவ், வேக்கம் கிளீனர் உள்ளிட்ட பொருட்களை வாங்கி இருப்பதாகவும், சமூகநலத்துறை அமைச்சர் அலுவலத்திற்கு கடந்த நான்கு மாதம் டீ வாங்க அரசு நிறுவனமான பாப்கோ நிறுவனத்தில் இருந்து 15 ஆயிரத்து 980 ரூபாய் செலவு செய்து இருப்பது தெரியவந்தது பிற அமைச்சர் அலுவலகம் சரியான பதிலை தெரிவிக்கவில்லை 

இதையடுத்து புதுச்சேரி அமைச்சர் அலுவலகங்கள் விதிமுறைகளை மீறி அரசுத்துறை மற்றும் சார்பு நிறுவனங்கள் நிதி செலவு செய்யப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு கவர்னர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமிக்கு ஆதாரத்துடன் மனு அனுப்பி உள்ளதாகவும் அந்த மனுவில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் வழக்கமாக இந்த செலவினங்கள் அமைச்சரவை செலவினங்கள் தான் மேற்கொள்கின்றன இந்த நிலை ஏன் அரசு சார்ந்த நிறுவனங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது அதேசமயம் பல அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது எனவே அமைச்சர் அலுவலகங்களுக்கு, அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறையில் செலவு செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்

 இந்த நிலையில் நேற்று கவர்னர் கிரண்பேடி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள (வாட்ஸ் அப்பில் தகவல்) யார் சட்டவிதிகளின் மீறினாலும் அதற்கான பதிலை கூற அவர்கள் கடமைப்பட்டவர்கள் அமைச்சர் அலுவலக செலவு விவகாரம் தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இந்த விவகாரத்தில் சட்டவிதிகளை மீறி உதவி புரிந்தவர்களும் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

Whoever breaks rules is accountable. A *vigiliance enquiry* has been ordered. For your info. 
Public officials who facilitate violation of rules are accountable.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.