உடல் வலிமையை பேணி காக்கும் வகையில் 'ஃபிட் இந்தியா' என்ற திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் ஃபிட் இந்தியா இயக்கத்தில் இணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
பிரதமரின் இந்த அழைப்பை ஏற்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ஆளுநர் மாளிகையில் தினமும் உடற்பயிற்சி செய்தும், தியானம், டென்னிஸ் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். அதனை பொதுமக்களுக்கு சமூகவலைதளங்கள் வழியாக வெளியிட்டு வருகிறார். கிரண்பேடி பயிற்சியில் ஈடுபட்டிருந்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.