உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பஞ்சாப் லைன்ஸ் காலனி பகுதியில் வசித்துவந்த ரயில்வே ஊழியரான சுர்ஜீத் கொலைசெய்யப்பட்டு, குளத்தில் சடலமாகக் கிடந்தார்.
இது தொடர்பாக சுர்ஜீத்தின் மனைவி ரிஷிகா, ரிஷிகாவின் தாயார் ரமா தேவி உள்ளிட்டவர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் ரிஷிகா, ரமா தேவி, தவேந்திரா என்கிற கன்சா ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்தனர்.
இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் தர்மேந்திர சவுகான் கூறுகையில், “ரமா தேவி, கன்சா என்பவருடன் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதற்கு சுர்ஜீத் எதிர்ப்புத் தெரிவித்துவந்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ரிஷிகாவிடம் சுர்ஜீத் கேட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரம் அவருக்கு முன்பே தெரியும் என்பதால் அவரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இந்த விவகாரத்தால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி வீட்டில் தகராறு நடந்துள்ளது. இதனையடுத்து சுர்ஜீத்தை கொலைசெய்ய மூவரும் திட்டமிட்டனர்.
அதன்படி ரமா தேவி சுர்ஜீத்தை தனது வீட்டிற்கு இரவு உணவுக்கு அழைத்துள்ளார். அவரும் ரமா தேவியின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் முன்பே திட்டமிட்டிருந்தபடி சுர்ஜீத்தின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலைசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டனர். சுர்ஜீத் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:'உத்தரப்பிரதேச கொலைகள் குறித்து கடும் நடவடிக்கை தேவை' - பிரியங்கா காந்தி!