ETV Bharat / bharat

உலகப் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா முதல்முறையாக ரத்து! - பூரம் திருவிழா ரத்து

திருச்சூர்: கரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் புகழ்பெற்ற கேரள மாநிலத்தின் முக்கியத் திருவிழாவான பூரம் திருவிழா முதல்முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

keralas-thrissur-pooram-festival-cancelled-for-the-first-time

author img

By

Published : Apr 15, 2020, 7:33 PM IST

கேரள மாநிலத்தின் தாய் திருவிழாவாகப் பார்க்கப்படும் திருச்சூர் பூரம் திருவிழா, தொடர்ந்து இரு நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை, கொச்சி மகாராஜா சக்தன் தம்பூரான் 18ஆம் நூற்றாண்டில் தொடங்கி வைத்தார்.

செண்ட மேளங்கள் முழங்க 50க்கும் மேற்பட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கைகளுடன் நடத்தப்படும் திருவிழா உலகப் புகழ்பெற்றது. இதனைப் பார்க்க பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வந்துசெல்வார்கள். இந்தத் திருவிழாவில் நடத்தப்படும் யானைகளின் ஊர்வலம் பிற்பகலில் தொடங்கி அடுத்த நாள் வரை தொடரும்.

இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக முதல்முறையாக திருச்சூர் பூரம் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில வேளாண் துறை அமைச்சர் வி.எஸ். சுனில்குமார் பேசுகையில், '' இந்த ஆண்டில் திருச்சூர் பூரம் திருவிழா மே மாதம் 2ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் கோயில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து திருவிழாவை ரத்து செய்வதாக அனைவரும் முடிவு எடுத்துள்ளோம்.

ஆனால் திருச்சூர் கோயிலில் அன்றைய நாளின்போது பூஜைகள் நடத்தப்படும். மக்கள் யாருக்கும் பங்கேற்க அனுமதியில்லை. 5 பேர் மட்டுமே பங்கேற்பார்கள். இதுவரை திருச்சூர் திருவிழா ரத்து செய்யப்பட்டதே இல்லை'' என்றார்.

இதையும் படிங்க: உலகப் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.