கேரளாவில் கொரோனா வைரஸ் அச்சம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கேரள சுகாதரத் துறை அமைச்சர் கே.கே. சைலாஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில்,"கொரோனா வைரசை எதிர்கொள்ளும் வகையில் நிர்வாகம் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளது. நாங்கள் சுமார் ஆயிரத்து 116 நபர்களைத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம். அதில், 976 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
மேலும், 149 பேர் மருத்துவமனைகளில் தனியாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள். பதனம்திட்டாவில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு இருந்திருக்கிலாம் எனக் கருதப்படும் 733 நபர்கள் மருத்துவக் கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
தற்போது, கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் பெரும் அச்சம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: தனிமைப்படுத்தும் மையத்தை தயார்படுத்த உள்துறை அமைச்சகம் கோரிக்கை