கோழிக்கோடு விமான நிலையத்தில், துபாயிலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், விமான போக்குவரத்துத்துறை இயக்குநரக மூத்த அலுவலர்கள், விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர்கள், விமான நிலையங்களின் ஆணையக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் டெல்லியில் சந்தித்து இந்த விபத்து குறித்த ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் ராஜீவ் காந்தி பவனில் நடைபெறவுள்ளது.
![கருப்பு பெட்டி மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01:16:21:1596872781_8339109_kk.jpg)
இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விசாரணையை தொடங்கியுள்ளோம். விமான விபத்து விசாரணை முகமையைச் சேர்ந்த குழு சம்பவ இடத்திற்கு சென்று ஆராய்ந்து வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோழிக்கோடு விமான விபத்தால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன் - மோடி இரங்கல்