திருவனந்தபுரம்: கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா புதன்கிழமை தனது கருத்தை வாபஸ் பெற்றார். முன்னதாக அவர், "இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு செயற்பாட்டாளர்கள் பெண்களை துன்புறுத்தமாட்டார்களா? எனக் கேட்டிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரமேஷ் சென்னிதலா, “என் வார்த்தைகள், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. மேலும் எனது வார்த்தைகள் பெண்களுக்கு சிறிதளவும் வலியை ஏற்படுத்தக் கூடாது.
நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, நான் குறிப்பு ஒன்றை அளித்தேன். அந்தக் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.
மாநிலத்தில் அரசாங்கத்தின் கடுமையான தோல்வி காரணமாக இரண்டு இளம் பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். ஆரண்முலாவில் ஆம்புலன்சில் ஒரு இளம் பெண்ணையும், மற்றொரு பெண்ணை திருவனந்தபுரத்தில் சுகாதார ஆய்வாளரால் சித்திரவதை செய்ததற்கு சுகாதாரத் துறை பொறுப்பாகும்.
கேரளாவை உலகிற்கு முன்பாக களங்கத்தின் விளிம்பிற்கு தள்ளிய இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
மேலும், "குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகள், ஊழல் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் சென்னிதலா கேட்டுக்கொண்டார்.
முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கோவிட்-19 சான்றிதழ் பெற சென்ற இடத்தில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தது காங்கிரஸ் ஆதரவாளர் என்று செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக பதிலளிக்கையில் கம்யூனிச கட்சியின் அமைப்பை ரமேஷ் சென்னிதலா வம்பிழுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாங்கள் பிழைத்துக் கொள்வோம்’ - உலகின் முன் பெருமிதம் கொள்ளும் கேரளம்!