ஜோ ஆப்ரஹாம் மேத்யூஸ் என்ற கேரளாவைச் சேர்ந்த இளைஞர் பெங்களூரூவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். இவருக்கு ’டிண்டர்’ என்ற டேட்டிங் ஆப் மூலம் பள்ளி ஆசிரியை ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் சில நாள்களில் காதலாக மாற, இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர்.
இதனிடையே, ஜோ ஆப்ரஹாம் தனது தொழிலை முன்னேற்றுவதற்கு பண உதவியை ஆசிரியையிடம் கேட்டுள்ளார். இதனை நம்பிய ஆசிரியையும் ரூ.34 லட்சம் பணத்தை அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணம் கொடுத்த சில நாள்களிலேயே ஜோ ஆப்ரஹாம் தலைமறைவாகியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியை, காவல் துறையினருக்கு புகாரளித்தார். உடனடியாக காவலர்கள் விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து, ஜோ ஆப்ரஹாமை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை செய்தனர். விசாரணையில், இதேபோல் ஏராளமான பெண்களை அவர் ஏமாற்றியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
’டேட்டிங்’ ஆப் மூலம் அறிமுகமான இளைஞர், திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி ஆசிரியையிடம் பண மோசடி செய்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை, மகன் கைது