கேரள மாநிலம் கசார்காட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பலாப்பழம் பறிக்கும்போது எதிர்பாராதவிதமாக பழம் ஒன்று அவரது தலையில் விழுந்துள்ளது. இதில், தலையில் காயம் ஏற்பட்டதோடு முதுகுத் தண்டுவடத்திலும் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சைக்காக கன்னூர் பரியாரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்யப்படும் முன்பு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனையோடு கரோனா பரிசோதனையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது.
அதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொற்றுக்கான எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு எவ்வாறு கரோனா தொற்று பரவியது என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. இவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான விழிப்புணர்வு இ-புத்தகத்தை உருவாக்கிய மருத்துவர்கள்!