ETV Bharat / bharat

மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது! - திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்: கொல்லம் அருகே தனது இரு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Kerala rape cases
Kerala rape cases
author img

By

Published : Jul 26, 2020, 2:34 PM IST

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியில் தனது இரு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை நேற்று (ஜூலை 25) கைது செய்யப்பட்டுள்ளார். இதில் மூத்த மகளுக்கு 12 வயதும், இரண்டாவது மகளுக்கு எட்டு வயதும் ஆகிறது.

இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மூத்த மகள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அப்போது மருத்துவரிடம் நடந்தவை குறித்து தெரிவித்துள்ளார். உடனே மருத்துவர் காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அக்குழந்தைகளின் தந்தை மீது குன்னிகோட் காவல் துறையினர் ஜூலை 24ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், ”இரண்டு மாதத்திற்கு முன்பு எனது தங்கைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவமனையில் சில நாள்கள் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் எனது தாயும் இருந்தார். அச்சமயத்தில்தான் எனக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது” என்றார்.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது மகளும் இதேபோல் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியில் சொல்லக் கூடாது என்று அவர் தந்தை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் மருத்துவப் பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, அவர்களிடமிருந்து மேலும் தகவல்கள் பெறப்படும் என குழந்தை நல அலுவலர்கள் தெரிவித்தனர்.

மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.