‘இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக’ என்ற விளம்பர வாசகத்தை நாம் வெவ்வேறு கட்டங்களில் நிச்சயமாக கேட்டிருப்போம். ஆனால், தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, திருச்சூர் அடுத்துள்ள வியூர் மத்திய சிறை நிர்வாகம் சொந்த தொலைக்காட்சி சேனலை தொடங்கியுள்ளது.
முழுக்க முழுக்க சிறைச்சாலையில் தங்களின் வாழ்நாட்களை கழிக்கும் கைதிகளை மட்டுமே ஊழியர்களாகக் கொண்டு இந்த தொலைக்காட்சிச் சேனல் இயங்கவிருக்கிறது. இதற்கு ‘ஃப்ரீடம் சேனல்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதில் கைதிகளின் நடிப்பில் தயாரிக்கப்படும் மிமிக்ரி, காமெடி, படம், டான்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெளியிடப்பட இருக்கின்றன. வீணாகக் கழியும் கைதிகளின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் முயற்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.