கேரள மாநிலம், கொல்லத்தில் இரவிபுரத்தில் உள்ள கக்கத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர், வினோத் - அஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு ஷரோன், ஷிமயோன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களின் வீடு கக்கத்தோப்பில் கடல் ஊடுருவல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நூற்றுக்கணக்கான வீடுகளில் ஒன்றாகும். இப்பகுதியில் கடல் மட்டம் சிறிது உயர்ந்தாலும் வாழும் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்துவிடும்.
அதேசமயம் யாரும் அதைப்பற்றி கவலைப்படாமல் தங்களி்ன் அன்றாட வேலைகளில் மும்முரம் காட்டி வரும் சூழ்நிலையில், நான்கு வயதான ஷரோனின் செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கரோனாவால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளதால், பல இடங்களில் ஆன்லைன் கல்வியின் பக்கம் திரும்பியுள்ளனர். ஷரோனின் கதையும் அதுதான்.
தனது நண்பர்கள் அனைவரும் ஆன்லைன் கல்வியை வீட்டிலிருந்து பயிலும் போது, தன்னாலும் தனது சகோதரனாலும் கற்றுக்கொள்ள முடியாதா என்ற ஏக்கம் மனதில் வந்துள்ளது.
இதையடுத்து, தனது வீட்டை காப்பாற்றத் தானே களத்திலிறங்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கு தேர்ந்தெடுத்த வழி வித்தியாசமானது. அச்சிறுவன் நேராக கடலினைப் பார்த்து, 'நான் படிக்க வேண்டும்' என்றும், 'எனது வீட்டை அழித்துவிடாதே' என்றும் பிரார்த்தனையை செய்துகொண்டே படித்திருக்கிறான். சிறுவனின் பிரார்த்தனையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அந்தச் சிறுவனின் ஆசை, தற்போது அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாக மாறியுள்ளது.