கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர், கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்கள் அருகில் காபி குடிக்கும் காணொலி வெளியாகியுள்ளது. காபி கெட்டில் மற்றும் கப்கள் ஆகியவற்றை ஸ்ட்ரெச்சரில் வைத்திருப்பதை நோயாளி ஒருவர் படம் பிடித்து வெளியிட்ட பிறகு இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் ஷர்மத் கூறுகையில், " பானங்கள் விநியோகிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ள உடலை நியாயப்படுத்த முடியாது. இதுகுறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்து மணி நேரமாக கிடந்த உடலுக்கு வெளியே பானங்கள் பகிரப்பட்டதாகக் கூறப்படும் செய்தி முற்றிலுமாக தவறானது.
உணவும் எதுவும் விநியோகிக்கபடவில்லை. சில நோயாளிகள் தேநீர் கேட்டத்தின் பேரில் காபி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது செய்யப்படக்கூடாது, விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். மருத்துவமனையின் இந்த பொறுப்பேற்ற செயல் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.