சீனாவில் முதலில் பரவிய கரோனா வைரஸ் தொற்று அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் மிக வேகமாக பரவிவருகிறது. சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ் நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் சனிக்கிழமையன்று முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டது.
இதேபோல, கேரளா மாநிலத்திலும் மூவருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, கரோனா வைரஸ் தொற்றை மாநில பேரிடராக தற்போது கேரளா அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா, "கரோனா வைரஸ் தொற்றை கேரளா அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
கேரளா தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் தலைமையிலான மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா அச்சம் - சிங்கப்பூரிலிருந்து புதுச்சேரி திரும்பியவரின் ரத்தமாதிரி சோதனை