ETV Bharat / bharat

புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்; பலி எண்ணிகை உயர வாய்ப்பு..!

நீலகிரி: வயநாட்டில், மழையில் சிக்கி 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள நிலையில் மண்ணில் சிக்கி கொண்டவர்களை தேடும் பணி தீவரமாக நடந்துவருகிறது.

கேரளா வெள்ளம்
author img

By

Published : Aug 12, 2019, 10:29 PM IST

நீலகிரியின் உயிர்ச் சூழல் காப்பகமாக உள்ளது வயநாடு. வயநாடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பலத்த மழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக குழகபாறை, மேற்பாடி, முட்டியங்காடு மற்றும் குத்துமலை பகுதிகளில் மழையானது கொட்டி அதிகளவில் இருக்கிறது.

இதனால் இந்த பகுதிகளில் வாழும் பெரும்பாலானவர்களின் வீடுகள் இடிந்து, வெகு தொலைவிற்கு இழுத்து வரப்பட்டு தரைமட்டமாகின. வீடுகள் மட்டுமின்றி கோயில், பள்ளிகள், பள்ளிவாசல்கள் இடிந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கியும், மண்ணில் புதைந்தும் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மலைகளிலிருந்து ஆறு போல மழைநீர் ஆர்ப்பரித்து வருவதால், பல பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டும், மண்ணில் புதைந்தும் காணாமல் போயுள்ளனர்.

புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்

குத்துமலையிலிருந்து 10பேரின் உடல்களும், முட்டியங்கியிலிருந்து இரண்டு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்துள்ளதாகவும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் இன்னும் பல பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் 2500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை, உணவுப் பொருட்கள், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

காலநிலை மாற்றத்தால் இதுபோன்று மழை பெய்து வருகிறது என கூறப்பட்டாலும், மலைப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள், வனப்பகுதிகளை அழித்த காரணத்தாலேயே இந்த கோரச் சம்பவம் நிகழ்கிறது எனச் சூழலியல் ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்படுகிறது.

Intro:OotyBody:
உதகை 12-08-19
நீலகிரியின் உயிர்சூழல் காப்பகமாக கருதபடும் வயநாடு மாவட்டத்தில் மழையில் சிக்கி 20ற்கும் மேற்பட்டவர்கள் பலி. மண்ணில் சிக்கி கொண்டவர்களை தேடும் பணி தீவரம். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்.

நீலகிரி மாவட்டத்தின் உயிர்சூழல் காப்பகமாக உள்ளது வயநாடு. வயநாடு மாவட்டத்தில் கடந்த 10நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக குழகபாறை, மேற்பாடி, முட்டியங்காடு மற்றும் குத்துமலை பகுதிகளில் மழையானது கொட்டி வருகிறது. இந்த பகுதிகளில் வாழும் பெரும்பாலானவர்களின் வீடுகள் இடிந்து வெகு தொலைவிற்கு இழுத்து வரப்பட்டு தரைமட்டமானது. வீடுகள் மட்டுமின்றி கோவில், பள்ளிகள், பள்ளிவாசல்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கியும், மண்ணில் புதைந்தும் 20ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழிந்தனர். மலைகளிலிருந்து ஆறு போல மழைநீர் ஆற்பரித்து வருவதால் பல பேர் ஆற்றில் அடித்து செல்லபட்டும், மண்ணில் புதைந்தும் காணாமல் போயிலுள்ளனர். குத்துமலையிலிருந்து 10பேரின் உடல்களும், முட்டியங்கியிலிருந்து 2பேரின் உடல்களும் மீட்கபட்டுள்ளது. மேலும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் 26பேர் உயிரிழிந்துள்ளதாகவும், 100ற்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்துள்ளதாவும், தண்ணீரில் அடித்து செல்லபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் இன்னும் பல பேர் உயிரிழிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் 2500ற்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கபட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, உணவு பொருட்கள், நிவாரண பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் இதுபோன்று மழை பெய்து வருகிறது என கூறபட்டாலும், மலை பகுதிகளில் தேயிலை தோட்டங்கள், வனபகுதிகளை அழித்த காரணத்தாலேயே இந்த கோர சம்பவம் நிகழ்கிறது என கூறப்படுகிறது.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.